வவுனியாவில் கஞ்சாவுடன் பெண் கைது

செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்தில் ஒருதொகை கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வலய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் குறித்த பெண்ணிடமிருந்து 04 கிலோவும் 62 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •