மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீளத்திறப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட தென் மாகாணத்தின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பிப்பதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராஜபுத்ர தெரவித்துள்ளதுடன், தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மீள ஆரம்பிப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.