விடுமுறைக் காலத்தில் விடைத்தாள் திருத்தும் பணி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை, பாடசாலை விடுமுறைகளின் போது மேற்கொள்வதற்கான யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் ஏற்படும் வீணான காலதாமதங்களைக் கருதியே, இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.