20,000 பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்பு?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் 20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்ததுடன், கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றதாகவும், இதன் இறுதி பெறுபேறுகள் அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக, 20,000 பேரை அரச சேவைகளில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.