பாகிஸ்தானில் இடைக்காலப் பிரதமர் நியமனம்

உலகச் செய்திகள்

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி நசிருல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்கு மட்டுமே நசிருல் முல்க் பிரதமராக கடமையாற்றவுள்ளதாகவும், இந்த பதவிக்காக பாகிஸ்தானின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் சுமார் 6க்கும் மேற்பட்டவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், நசிருல் முல்க், ஒரு மனதாக இடைக்கால பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.