மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கையில் கடந்த காலங்களைப் போலவே 2017ஆம் ஆண்டிலும் மத ஸ்தானங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதாக ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள உலக நாடுகளின் மதச்சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்காவின் தூதுவர் சேம் ப்ரௌன்பேக் ஆகியோர் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டனர். இந்த அறிக்கையின் பிரகாரம், இலங்கையில் சிறுபான்மை மத ஸ்தானங்கள் மீதான வன்முறை சம்பவங்கள் பல பதிவாகி இருப்பதாகவும், இந்த வன்முறைகளுடன் பல பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் தொடர்பு கொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மை மத மற்றும் இனத்தவர்களுக்கு எதிரான குரோத வாதங்கள் முன்வைக்கப்படுவதுடன், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவ்வாறான குரோத பதிவுகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.