இலவச விவசாய காப்புறுதித் திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

விவசாய காப்புறுதியை இலவசமாக வழங்கும் பணிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நெல், வெங்காயம், மிளகாய், சோளம், உருளைக்கிழங்கு ஆகிய பயிர் உற்பத்தியாளர்களுக்கு நன்மை கிட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் விவசாயக் காப்புறுதிக்காக அரசாங்கம் 5,228 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. பயிர்ச் சேதங்களின் போது விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் விவசாய காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ், உறுப்பினர் தொகையாக வருடாந்தம் 1,350 ரூபாவை விவசாயிகள் இதுவரைக் காலம் செலுத்த நேர்ந்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய, இந்த கொடுப்பனவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.