குண்டு துளைக்காத வாகனங்களைப் பார்வையிட வாய்ப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்கள் பயன்படுத்திய, குண்டு துளைக்காத வாகனங்களில் எட்டு வாகனங்களை, காட்சிக்கு வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த குண்டு துளைக்காத வாகனங்கள் எட்டும், கொழும்பு-02 ஹ_னுப்பிட்டிய கங்காராம விகாரையிலேயே காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய வானங்களில் எட்டு, நீர்கொழும்பு ஆழ்கடலில், அண்மையில் மூழ்கடிக்கப்பட்டதாகவும், அந்த அதி பாதுகாப்புகளை கொண்ட வாகனங்களை நவீனப்படுத்தி பயன்படுத்துவதற்கு இயலாது என்பதனாலும், விற்பனைச் செய்வதற்கோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கோ முடியாது என்பதனாலும், அவற்றை ஆழ்கடலில் மூழ்கடித்து, அழிக்கப்பட்டதென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகம் பயன்படுத்திய வாகனங்களில் 95 வாகனங்களுக்கான செலவுகளை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட 16 அரச நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டிருந்தன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.