மலையக ரயில் சேவையை வலுப்படுத்தத் திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மலையகத்துக்கான தொடருந்து சேவையை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்படும் எனவும், இதன்மூலம் மலையகத்துக்கான தொடருந்து சேவையினை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை 1.4 பில்லியன் டொலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடாக பெற்றுக் கொள்ளுமென மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளதுடன், இந்த வருட இறுதிக்குள் 2.75 பில்லியன் டொலர்களை நேரடி வெளிநாட்டு முதலீடாக பெற முடியும் என்றும், கடந்த ஆண்டு மொத்தமாக 1.9 மில்லியன் டொலர்கள் நேரடி முதலீடாக கிடைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Trending Posts