அமெரிக்கா சென்றார் வடகொரிய முக்கியஸ்தர்

உலகச் செய்திகள்

அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் வலது கை என்று கூறப்படும் முக்கிய அதிகாரியான ஜெம் கிம் யொங்-சொல் அமெரிக்காவை சென்றடைந்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும் வடகொரியாவின் அதிமுக்கிய சிரேஷ்ட அதிகாரி அவர் என்றும், அவர் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

எதிர்வரும் ஜுன் மாதம் 12ஆம் திகதி அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடைபெறவிருந்த போதும், அதனை இரத்து செய்வதாக முதலில் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், பின்னர் இரண்டு தரப்பும் இந்த சந்திப்பை மீள ஒழுங்கு செய்ய இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.