அர்ஜுன் அலோசியஸிடம் பணம் வாங்கிய சரத் பொன்சேகா

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மத்திய வங்கியின் முறிவிநியோகம் தொடர்பில் விளக்கமறியலிலுள்ள அர்ஜூன் அலோசியஸ், தேர்தலுக்காக தமக்கு பணம் பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மல்வத்து பீட மகாநாயகர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்ததுடன், தேர்தல் காலத்தின் போது அர்ஜூன் அலோசியஸ் தன்னை சந்திக்க வந்து, தன்னிடம் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி சென்றதாகவும், தனக்கு அருகில் இருந்த வேட்பாளர்கள் இருவரிடம் குறித்த காசோலையை தான் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.