6.5 கோடி பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த போலாந்து நாட்டுப் பிரஜை ஒருவரை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்று காலை 8.50 மணியளவில் டுபாயில் இருந்து வந்த விமானத்தில் சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 10 கிலோ கிராம் நிறையுடைய 100 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி சுமார் 65 மில்லியன் என விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.