08 மாத குழந்தை கடத்தல்: வவுனியாவில் பரபரப்புச் சம்பவம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த எட்டு பேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 மாதங்களேயான குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றிலேயே இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வானில் வந்தவர்களே குழந்தையைக் கடத்திக்கொண்டு தப்பிச்சென்று விட்டதாக பெற்றோர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசுதரன் வானிஷன் என்ற குழந்தையையே இனந்தெரியாத நபர்கள் கடத்திச்சென்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Trending Posts