23 வருடங்களின் பின்னர் பொதுமக்களின் நிலம் விடுவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அச்சுவேலி பகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் இன்று பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது.

9 குடும்பங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணிகள் 1995ஆம் ஆண்டு முதல் 521ஆவது படையணியின் பயன்பாட்டிலிருந்து வந்த நிலையில், இதில் 50 வீதமாக காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி காணிகள் எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் விடுவிக்கப்படும் எனவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மிகுதி காணிகளும் விடுவிக்கப்படும் வரை காணிகளுக்கு செல்லமாட்டோமென குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.