ஜனாதிபதியின் கருத்துக்குப் பதிலளிக்கத் தேவையில்லை – பிரதமர்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதி மைத்திரிபால நேற்றைய தினம் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்க முயற்சிக்க வேண்டாமென ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று (31) இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது, கட்சியின் இளம் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உரைக்கு பதிலளிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள போதிலும், அதனைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்திய பிரதமர், ஜனாதிபதியின் உரைக்கு பதிலளிப்பதை விடுத்து, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் 76ஆவது பிறந்ததின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் “தான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், முதலாவது விடயமாக, நாடாளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும். பிரதமர் தலைமையிலான அரசாங்கம், 100 நாட்கள் வேலைத்திட்டத்தை கொண்டுவந்தமையால், அது தவறவிடப்பட்டது. அந்த 100 நாள் வேலைத்திட்டம் முட்டாள்தனமான வேலையாகுமென குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.