100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஐ.தே.க பொறுப்பல்ல

செய்திகள் முக்கிய செய்திகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயமல்ல. அது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய அனைவரும் இணைந்து உருவாக்கிய ஒரு திட்டமென ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

“மைத்திரியின் தலைமையிலான அரசாங்கம் 100 நாட்களில் புதிய நாடு” என்ற தொனிப்பொருளில் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த பொது மற்றும் சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ஒரு விடயமே 100 வேலைத்திட்டமென கட்சியின் தலைமையகமாக ஸ்ரீகொத்தாவில், கட்சியின் ஊடக நடவடிக்கைப் பிரிவை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ராஜபக்ஷ குழுவுடன் சிலர் முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தமையால், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாகவும், எவ்வாறாயினும் தகவலறியும் சட்டம் மற்றும் 19ஆவது திருத்தச் சட்டம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டமை மகிழ்ச்சிக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •