உடன்படிக்கையில் 13 பேரின் திருத்தங்கள் இல்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கைக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான உடன்படிக்கைக்கு அமைச்சர்கள் 13 பேர் முன்வைத்த திருத்தங்கள் உள்வாங்கப்படவில்லையென ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளதுடன், குறித்து உடன்படிக்கை தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிற்கு சவால் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரூபாவின் பெறுமதி நாளாந்தம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், தற்போது நடைமுறையிலிருக்கும் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், இந்த வருடத்தின் இறுதியில் டொலருக்கான ரூபாவின் பெறுமதி 165 ரூபாவாக அதிகரிப்பதை எவராலும் தடுக்க முடியாது என்றும் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.