கிழக்கு மாகாண ஆளுநர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகமவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி வரை ஒத்தி வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

முதலீட்டு சபையின் தலைவராக பதவி வகித்த காலப்பகுதியில் 37 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவிட பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் வடவலவை தன்னிச்சையாக செயற்பட அனுமதி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டது.

நேற்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் முன்னிலையான கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் விசாரணைகளை ஒத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.