மத்திய செயற்குழுக் கூட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (07) நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு 7.00 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக, புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித்த பின்னர் நடைபெறவுள்ள முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டம் இது எனவும், இன்றைய கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.