திரவப்பால் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

திரவப்பால் உற்பத்திக்கு, பல்நோக்குடைய வேலைத்திட்டம் உள்ளடங்கிய சட்டமூலம் ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துறைசார்ந்த அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது 450 பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டு வரும் திரவப்பால் வழங்கும் செயற்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவும் எதிர்பார்ப்பதாகவும், முதற்கட்டமாக சுமார் 17 இலட்சம் அளவிலான ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்குடைய திரவப்பால் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டளவில் திரவப்பால் உற்பத்தியை தன்னிறைவடைய செய்வதற்காகவே, ஜனாதிபதியினால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.