ஆசிரியர் தாக்கப்பட்டமையை எதிர்த்து போராட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியரான பிரதீபன் எனும் ஆசிரியரே நேற்று (06) இரவு இவ்வாறு தாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த தாக்குதலைக் கண்டித்து கல்லூரியின் நுழைவாயிலில் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இன்று காலை இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது தாக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், ஆசிரியர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.