வழக்குகளை மீளப்பெற்றார் சம்பிக்க

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகத் தெரிவித்து, சிங்கள பத்திரிகை நிறுவனம் ஒன்றின் மீது தொடுக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளையும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீளப்பெற்றுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பில், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியான செய்தி ஒன்றில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 500 மில்லியன் ரூபாய்களை இழப்பீடாகக் கோரி அமைச்சர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன், கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15ஆம் திகதி நிலக்கரி இறக்குமதித் தொடர்பில் வெளியான செய்தியினாலும் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அமைச்சர் ஒரு பில்லியன் ரூபாய்களை நஷ்டஈடாகக் கோரி மற்றுமொரு வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரண்டு மானநஷ்ட வழக்குகளையும் மீளப் பெற்றுக்கொள்வதாக அமைச்சர் அறிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் இன்று அறிவித்ததை அடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த இரண்டு வழக்குகளையும் நேற்று (07) இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.