கோப் குழுவின் தவிசாளராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கோப் குழுவின் புதிய தவிசாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்மொழிந்ததுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன வழிமொழிந்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி வரை கோப் குழுவின் தவிசாளராக கடமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.