அர்ஜுன் மஹேந்திரனின் கடனட்டை நிலுவையை மென்டிஸ் நிறுவனம் செலுத்தியது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனின் கடன் அட்டை நிலுவைத் தொகையை டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 3.2 மில்லியன் ரூபா கடன் அட்டை நிலுவைத் தொகையை காசோலைகள் மூலம் டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தால் கிடைக்கப்பெற்ற 3 மில்லியன் ரூபாய் காசோலைகள் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காசோலைகள் இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளால் பணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Posts