ஐந்து மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

எதிர்வரும் சில நாட்களுக்கு மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான அடை மழை பெய்யுமென காலநிலை அவதான நிலையம் எதிர்கூறியுள்ளது.

மழையுடன் அவ்வப்போது மணிக்கு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முதல் மத்திய மலைநாட்டில் பெய்துவரும் மழையினால் ஹற்றன் பகுதியில் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், லக்ஷபான, விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.