ஸ்ரீ.சு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் தாவல்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியுடன் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கு முரணாக, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர் வாக்களித்தமையால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், அந்த 16 பேரடங்கிய அணியுடன் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழுவினர், சுதந்திரக் கட்சியின் 16 பேரடங்கிய குழுவுடன் இணைந்து, அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதென, அடிப்படையில் இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில், கடந்த 5ஆம் திகதியன்று இடம்பெற்ற பிரதிச் சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின் போது, ஒன்றிணைந்த எதிரணிக்குள் ஏற்பட்டிருந்த முரண்பாடே, இந்தப் பிளவுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.