மீண்டும் மாற்றமடையும் அமைச்சரவை?

செய்திகள் முக்கிய செய்திகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில், மீண்டுமொரு சிறிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரை, அமைச்சரவைக்குள் உள்ளீர்த்துக்கொள்ளும் வகையிலேயே, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாற்றத்தின் போது, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கே பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய தனிப்பட்ட விஜயத்தை முடித்துகொண்டு நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற சந்திப்பின்போது, இது தொடர்பில் பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  •  
  •  
  •  
  •  
  •  
  •