கொக்குவிலில் வாள்வெட்டு: இருவர் காயம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணம், கொக்குவில் மேற்கு, ஆறுகால்மடம் பகுதியில் நேற்று இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.