இன்று முதல் மண்ணெண்ணெய்க்கு நிவாரணம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நாடளாவிய ரீதியில், இன்று (11) முதல் மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்கப்படுமென கடற்றொழில், நீரியல்வளத்துறை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுமென ஹம்பாந்தோட்டையில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

அத்துடன், எரிபொருட்களின் விலையேற்றத்தால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், குறிப்பாக, மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த விவகாரம் தொடர்பில், தன்னுடன் கலந்துரையாடிய மீனவர்கள், மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.