உள்நாட்டு உற்பத்தி வீதம் அதிகரிக்க வாய்ப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பூகோள ரீதியாக நாடுகளின் இந்த வருட மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆசிய நாடுகளின் விகிதாசாரம் அதிகரிக்கும் எனவும், இதற்கமைய இலங்கையின் உற்பத்தி விகிதம் 3.1 வீதமாக பதிவாகியுள்ளமை இந்த வருடத்தில் 4.8 சத வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் விகிதாசாரம் 4.5 ஆக உயர்வடையுமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாரிய வரட்சி உட்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட உற்பத்தி குறைவு இந்த ஆண்டில் படிப்படியாக உயர்வடைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.