வைரஸ் தாக்கத்தால் இரு குழந்தைகள் பலி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தெற்கில் பரவிவரும் இன்புளுவன்சா தொற்றினால் மேலும் இரு கைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 8 மாதங்களேயான இரண்டு பெண் குழந்தைகளே மரணமடைந்ததாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தென் மாகாணத்தில் 18 குழந்தைகள் வைரஸ் தொற்று காரணமாக மரணித்துள்ள நிலையில், இன்புளுவன்சா வைரஸ் தொன்றிற்குள்ளான நிலையில், மேலும் 30 சிறுவர்கள் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.