அமெரிக்க – ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு

உலகச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு குறித்த திகதி விரைவில் அறிவிக்கப்படுமென ரஷ்ய ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த தீர்மானம் இருநாட்டு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்றின் போதே தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்திப்பின் போது, சிரிய விவகாரத்தால் அமெரிக்கா - ரஷ்யா நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலை உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.