2 இலட்சம் பேரின் சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் கருத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அரசியலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் கடந்த காலத்தில் 2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லையென அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த சமுர்த்தி பெறுநர்களுக்கு அவற்றை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குருணாகல், ஹிரியால பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கட்சி எதிர்நோக்கும் நெருக்கடி, பிரச்சினைகள் மற்றும் பிளவுகளை முற்றாக இல்லது செய்து, 2020ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.