தபால் ஊழியர்களின் போராட்டம் அவசியமற்றது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லையென தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

தபால் சேவை சங்கத்தினரின் பிரதிநிதிகளுடன் கடந்த முதலாம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள போதிலும், தபால் அமைச்சோ, தபால் திணைக்களமோ தனித்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் அமுனுகமவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள போது, அமைச்சரவை ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும், இவ்வாறான சூழ்நிலையில் தொழிற்சங்க போராட்டம் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.