சமநிலையில் போட்டி நிறைவு

விளையாட்டு

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியைவிட 47 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 342 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் சிறப்பாக பந்துவீசி 8 விக்கட்டுக்களையும் கெமார் ரோச் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு 296 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றியிலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதினால், இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.