மாற்றுவலுவுள்ளவர்களுக்கான உதவித் திட்டங்கள் அவசியம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மாற்றுவலுவுடைய இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஏற்ற உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“சிறுவர்களைப் பாதுகாப்போம்” என்ற விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், மாற்றுத் திறனாளிகள் பலர், மக்களிடையே ஒரு மூலையில் கிடந்து அவ்வாறே வாழ்ந்து மடிந்த காலங்கள் இன்று மலையேறி விட்டன. இன்று அவர்கள் மாற்று வலுவுடைய பிள்ளைகளாக இனங்காணப்பட்டு, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் அரச பள்ளிகளும் தனியார் அமைப்புகளும் முன்வந்துள்ள நிலையில், இவர்களுக்கான உதவிகள் வழங்குவது அரசாங்கத்துக்குரிய தார்மீகக் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் உடலுறுப்புகளை இழந்து, அங்கவீனர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஏற்ற உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.