மூன்று இலட்சம் கையெழுத்து மகஜர் கையளிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய செயல் திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் கிளிநொச்சி மாநாட்டின் போது ஆனந்த சுதாகரனை விடுவிக்க கோரி 3 இலட்சம் கையெழுத்துக்களை பெற்ற மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

தாயை இழந்து, தந்தை சிறையில் அடைக்கப்பட்டு, குழந்தைகள் அநாதரவாக்கப்பட்டு உறவினர்களின் அனுசரணையில் வாழும், இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டுமென இந்த கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

எனினும் அவரது விடுதலையை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் வலியுறுத்தல்கள் தேவை என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வட மாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன், வடமாகாண கல்விச் சமூகமாகிய கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து 3 இலட்சம் கையொப்பங்களைப் பெற்று ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கும்படி வட மாகாணக் கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.