வைத்திய சேவைகள் வெட்வரி நீக்கம்?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் சிலவற்றுக்காக அறவிடப்படுகின்ற வெட் வரி நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வைத்தியரின் கட்டணம், வைத்திய ஆலோசனை கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம், ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வெட் வரி ஜூலை முதலாம் திகதி முதல் நீக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ள நிலையில், இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதுடன், வெளிநோயாளர் பிரிவுக்கு அறவிடப்படுகின்ற வெட் வரி ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும்போது அறவிடப்படுகின்ற அறைக்கட்டணம் மீதான வெட் வரி இருப்பது போன்றே அறவிடப்படும் என்றும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதியுடனே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.