டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிக்கலாம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அரசாங்கத்தினால் சிங்கப்பூர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாமென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் ஆட்சியமைக்கும் போது டொலரின் பெறுமதி 105 ரூபாவாக இருந்ததாகவும், 2014ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது டொலரின் பெறுமதி 131 ரூபாவாக இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாடு பல்வேறு சிக்கலுக்கு மத்தியிலும் ரூபாயின் குறைந்தபட்ச பெறுமதி நூற்றுக்கு 1.98 என்ற பெறுமதியில் இருந்ததுடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருட காலப்பகுதிக்குள் ரூபாயின் குறைந்தபட்ச பெறுமதி நூற்றுக்கு 6.5 ஆக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Trending Posts