மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்

உலகச் செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்து வந்த நிக்கி ஹாலே இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் செயற்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோமென தெரிவித்துள்ளார்.