நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தாதீர்கள் – சபாநாயகர்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான ஆவணங்கள், சட்டரீதியாகக் கிடைக்கும் வரை, ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்த வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் நாமத்துக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டாமென்றும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், மேற்படி விவகாரம் தொடர்பான சட்டரீதியான ஆவணங்கள் எவையும், ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அதுவரை, ஊடகங்கள் வாயிலாக ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்தி, நாடாளுமன்றத்தின் நாமத்துக்கும் உறுப்பினர்களின் கௌரவத்துக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு, ஊடகங்களிடமும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்