மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரை அழைத்து கலந்துரையாடப்படுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இன்னும் 3 நாட்களில் ஒரு வருடம் நிறைவடையவுள்ள போதிலும், மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து ஜனாதிபதியினாலோ, பிரதமரினாலோ அல்லது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினாலோ அறிவிக்க முடியாதுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் இணக்கம் கிடைத்தவுடன், மத்திய வங்கியின் முறி மோசடி அறிக்கையுடன் தொடர்புடைய ஏனைய முழுமைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி செயலாளர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.