தொழிலாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபாயிலும் அதிக தொகை வழங்கப்பட வேண்டுமென இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் வலியுறுத்தியுள்ளார்.

ரொசட் தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியதுடன், சம்பள உயர்வு உடன்படிக்கையில் தாங்கல் இல்லையென கூறி யாரும் நழுவிச் செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களிடம் இருந்து சந்தா பணம் அறவிடுகின்றன. எனவே அந்த தொழிலாளர்களின் நலனை பூர்த்தி செய்வதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும், அரசியல்வாதிகளும் தமது வரட்டு கௌரவத்தை கைவிட்டு முன்வர வேண்டுமென வடிவேல் சுரேஸ் அழைப்பு விடுத்துள்ளதுடன், அடிப்படை வேதனம் 750 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.