இன்றில் இருந்து புதிய அஞ்சல்மா அதிபர்

செய்திகள்

புதிய அஞ்சல்மா அதிபராக பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் . இந்த நியமனம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக அஞ்சல் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலிம் இன்று வெளியிட்டு உள்ளார்.

இதற்கு முன்னர் அஞ்சல்மா அதிபராக செயற்பட்ட ரோஹன அபேரத்ன ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிய இணைந்துள்ளதால், அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.