வடமாகாண ஆளுனர் தனது கருத்தினை மீள் மதிப்பீடு செய்ய வேண்டும்- அனந்தி

சிறப்புச் செய்திகள் செய்திகள்
வடமாகாண அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால், அது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தனது நிலையினை கூறியுள்ளார்.
மகளீர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண அமைச்சு தொடர்பாக எழுந்துள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு அமைச்சர்கள் தாமாக பதவி விலக வேண்டுமென அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடக்கு மாகாண ஆளுனர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பான  உத்தியோகபூர்வ அறிவித்தல்கள், எதுவும், முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ கிடைக்க பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.