நல்லாட்சி அரசாங்கத்தின் 3ஆம் ஆண்டு நிறைவு தினம்

செய்திகள்

பிரதான கட்சிகளை ஒன்றிணைத்து மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வளர்ச்சி கண்ட ஜனநாயகமும், மனித சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்ட தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.

இதற்காக சமாதானம், நல்லிணக்கம், அபிவிருத்தி ஆகியவற்றை மூலாதாரமாக கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அமுலாக்கப்பட்டன.

எதிர்கால நலன்கருதி இலட்சியங்களை அடையும் நோக்கத்துடன் தகுந்த அடித்தளத்தில் வேலைத்திட்டங்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கத்திற்கு, ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் ஆணை கிடைத்தது.

மக்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளின் அனுகூலங்களை மக்கள் அனுபவிக்கிறார்கள். சர்வதேச சமூகம் இலங்கை மீது நம்பிக்கையுடன் செயற்படுகின்றமை மற்றொரு வெற்றியாகும். ஐரோப்பிய ஒன்றியம் மீன் ஏற்றுமதி தடையை நீக்கியது. இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைத்தது.

சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக சட்ட திட்டங்கள் வலுவாக்கப்பட்டன. குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.கம்பெரலிய, என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா முதலான திட்டங்கள் மூலம் உற்பத்தி அதிகரித்து, இளம் தலைமுறைக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

முன்னைய அரசாங்கத்தின் மூலம் நாட்டின் மீது சுமத்தப்பட்ட பெரும் கடன் சுமையை முறையாக நிர்வகித்து பொருளாதாரத்தை வழிநடத்த வேண்டிய சவாலை அரசாங்கம் சமாளிக்க வேண்டியிருந்தது.

மொரகஹந்த நீர்பாசன திட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். வீடமைப்பு, விவசாயம், சுற்றுலா முதலான சகல துறைகளிலும் நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.