கோலியே இந்தியாவின் முற்று முழுதான வெற்றிக்கு காரணம் இல்லை – சங்கக்கார

செய்திகள் விளையாட்டு
இந்திய கிரிக்கட் அணி விராட் கோலியை மாத்திரமே நம்பி இருக்கிறது என்ற நிலைப்பாடு நியாயமானது இல்லை என்று, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
விராட் கோலி கடந்த பல வருடங்களாக சிறப்பாக துடுப்பாடி வருகிறார்.அவரது ஆட்டத்திறன் குறித்து பெருமிதம் கொள்ள முடியும்.
ஆனால் அவரை நம்பியே இந்திய அணி செயற்படுகிறது என்ற நிலைப்பாடு, நியாயமற்றது.
இந்தியாவின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் அதிக திறமைசாலிகளாக இருக்கின்றனர் என்று சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

அவர்கள் வெளி நாடுகளில் சிறப்பாக செயற்பட்டு வந்துள்ளனர் என்றும் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.