இலங்கை ஜனநாயக நாடா ? ஐ. நா வின் கேள்வி

சிறப்புச் செய்திகள் செய்திகள்

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் 39 ஆவது அமர்­வில் இலங்­கை­யில் மக்­க­ளின் வாக்­க­ளிக்­கும் உரிமை மீறப்­ப­டும் விவ­கா­ரம் தொடர்­பில் முறை­யி­ட­ வுள்­ள­தாக உல­க­ளா­விய தேசப்­பற்­றுள்ள இலங்­கை­யர் ஒன்­றி­யத்­தின் உறுப்­பி­னர் துசாந்தி ஹபு­கொட தெரி­வித்­தார்.

பொரளை என்.எம்.பெரேரா நிலை­யத்­தில் உல­க­ளா­விய தேசப்­பற்­றுள்ள இலங்­கை­யர் ஒன்­றி­யம் ஏற்­பாடு செய்த ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற் கண்­ட­வாறு குறிப்பிட்டு உள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்

இலங்­கை­யில் தற்­போது ஜன­நா­ய­கம் பேணப்­ப­டு­கின்­றதா என்­கின்ற சந்­தே­கம் எமக்­குள்­ளது. ஏனெ­னில் மூன்று மாகாண சபை­ க­ளின் பத­விக்­கா­லம் நிறை­வ­டைந்­துள்­ளது. இன்­னும் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வில்லை. மக்­க­ளின் வாக்­க­ளிக்­கும் உரி­மையை கூட் டரசு இல்­லாது செய்­துள்­ளது.

எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் மாதம் 19ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள மனித உரி­மை­கள் சபை­யின் 39ஆவது அமர்­வில் இலங்­கை­யில் தற்­போது மீறப்­ப­டும் உரி­மை­கள் குறித்த வரை­பு­களை முன்­வைக்­க­வுள்ளோம் என்றும் மேலும் பல குற்றசாட்டுக்களை முன்வைக்க போவதாக கூறி இருந்தார்.