யாழ் ஒசுசல மூலம் பல சலுகைகள் – பைசல் காசிம்

செய்திகள்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட ஒசுசல மருந்தகம் வடக்கு மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகுமென பிரதியமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

ஒசுசல மருந்தகத்தின் ஊடாக குறைந்த விலையில் 48 மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளலாமென பிரதியமைச்சர் கூறினார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற வைபவங்களில் அவர் உரையாற்றினார்.

இங்கு தாதியர் விடுதி, அரச ஒசுசல மருந்தகக் கட்டிடங்கள் திறக்கப்பட்டதுடன் புனர்வாழ்வு நிலையத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.இந்த நிகழ்வுகளில் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.