அடுத்த ஜனாதிபதிக்கான அடிப்படை தகுதிகள்…… மகிந்தாவினை விலக்கிய அரசாங்கம்

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 1
சமகால அரசியல் யாப்பு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில். அரசியலமைப்பின் மீதான 19 ஆவது திருத்தம் மூன்றாவது தடவையாக ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது என்றும் கூறினார்.
 இதுவிடயம் தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டென்று அவர் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றத்திடம் கோரப்படும் எதுவித விளக்கமும் நிராகரிக்கப்படும் என்று அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தகுதிகாண் தன்மையை எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்றும் ; உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்;.